உடலை இளமையாக்க தினமும், நடன பயிற்சி செய்யும் டாப்ஸி!
ஆடுகளம் படம் திரைக்கு வரும்போது இருந்த, அதே சந்தோஷம் தற்போது ஆரம்பம் வெளியாகும் நேரத்திலும் தனக்கு இருப்பதாக கூறுகிறார் டாப்சி. இந்த படத்தை பொறுத்தவரை, ஆர்யா, நயன்தாரா என்று என்னை விட சீனியர் கலைஞர்கள் நடித்துள்ளனர் என்றாலும், எனக்கும், அவர்களுக்கும் இணையான வேடம் கொடுக்கப்பட்டுள்ளது.
கதைப்படி நிருபராக நடிக்கும் எனக்கு, சிறு வயதில் இருந்தே பத்திரிகையாளராக வேண்டும் என்ற ஆசை இருந்ததால், அதை நடிப்பாக எண்ணாமல் லட்சியமாகக் கொண்டு நடித்துள்ளேன் என்கிறார், டாப்சி.
மேலும், என் உடல் கட்டை இன்னும் இளமையாக்க தினமும், நடன பயிற்சி செய்து வருகிறேன். இதனால், என் உடல் மட்டுமின்றி மனமும் தெளிந்த நீரோடையாக உள்ளது. கூடவே புதிய உற்சாகமும் எனக்குள் ஏற்பட்டுள்ளது என்கிறார் டாப்சி.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment