காணாமல் போன காவிரியை மீட்கும் கதை

No comments
ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன காவிரி ஆற்றின் ஒரு பகுதியை மீட்கும் கதையம்சம் கொண்ட படமாக ‘அங்குசம்‘ உருவாகிறது. இதில் புதுஹீரோயின் நடிக்கிறார். 

இதுபற்றி இயக்குனர் மனுகண்ணன் கூறியது: 

சட்டவிரோதமான ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன காவிரி ஆற்றின் ஒரு பகுதியை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மீட்டெடுத்த திருச்சி வாலிபர் ஒருவர் அதே சட்டத்தை பயன்படுத்தி ஊழலில் ஈடுபடுவர்களையும் கதி கலங்க வைக்கும் சம்பவமாக இக்கதை உருவாகி உள்ளது.

 சமுதாயக் கண்ணோட்டத்திலான படமாக இருந்தாலும் காதல், ஆக்ஷன், சென்டிமென்ட் என வர்த்தக ரீதியிலான அம்சங்களும் கலக்கப்பட்டு ரசிக்கும்படியான கதையாகவும் உருவாகி இருக்கிறது. ஸ்கந்தா ஹீரோவாக நடிக்கிறார். புதுமுகம் ஜெயதி குஹா ஹீரோயின். ஊழல்வாதியாக நான் வேடம் ஏற்பதுடன் பட தயாரிப்பு பொறுப்பும் ஏற்றிருக்கிறேன். விரைவில் இப்படம் வெளிவர உள்ளது.

No comments :

Post a Comment