சமந்தா திடீர் ‘ஸ்டிரைக்’ தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி

No comments
‘நான் ஈ‘ பட வெற்றிக்கு பிறகு சமந்தாவுக்கு தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு படவாய்ப்புகள் கிடைக்காததால் டோலிவுட்டில் கவனம் செலுத்தினார். அது கை கொடுத்தது. சமீபத்தில் வெளியான ‘அட்டரின்டிக்கி தரேடி‘ படம் சூப்பர் ஹிட் ஆனதில் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்.


 இந்நிலையில், தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் என 2 பெரிய படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். ‘அட்டரின்டிக்கி தரேடி‘ வெற்றிக்கு பிறகு புதிய படத்தை ஒப்புக் கொள்வதில் மிக கவனமாக இருப்பதாகவும், புதிய படங்கள் ஒப்புக் கொள்வதை நிறுத்தி வைத்திருப்பதாகவும் தனது இணையதள டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டிருக்கிறார்.

 அதில் கூறும்போது, ‘நான் தற்போது புதிய படங்கள் ஒப்புக்கொள்வதை நிறுத்தி இருக்கிறேன். என் மனதை புரட்டிப் போடும் கதை கிடைக்கும் வரையில் இந்த ஸ்டிரைக் தொடரும். அதே சமயம் ஏற்கனவே ஒப்புக் கொண்ட படங்களை முடித்துக் கொடுப்பேன். எனது வேலையில் நான் திறமையை வெளிப்படுத்தாவிட்டால் என்னை முழுவதுமாக ஒதுக்கி விடுவார்கள்.

இதனாலேயே இந்த முடிவு‘ என குறிப்பிட்டிருக்கிறார். இவரது திடீர் முடிவால் அவரை ஒப்பந்தம் செய்ய எண்ணி இருந்த தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். சமந்தாவின் இந்த திடீர் முடிவு, காதலன் சித்தார்த்தை மணப்பதற்கான நேரத்தை முடிவு செய்து விட்டாரோ என்ற கிசுகிசுவையும் கிளப்பி விட்டிருக்கிறது.

No comments :

Post a Comment