டிஸ்கோ சாந்தியின் கணவர் நடிகர் ஸ்ரீஹரி திடீர் மரணம்

No comments
நடிகை டிஸ்கோ சாந்தியின் கணவரும், பிரபல தெலுங்கு நடிகருமான ஸ்ரீஹரி, கல்லீரல் பாதிப்பு காரணமாக நேற்று மாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 49. கடந்த சில மாதங்களாக மஞ்சள் காமாலை நோய் காரணமாக கல்லீரல் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீஹரி, பிரபுதேவா இந்தியில் இயக்கும் படத்தில் நடிப்பதற்காக மும்பை சென்றிருந்தார். 

அங்கு அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி, நேற்று மாலை மரணம் அடைந்தார். 

இதையறிந்த தெலுங்கு படவுலகினர் அதிர்ச்சி அடைந்தனர். மறைந்த ஸ்ரீஹரியின் மனைவி, நடிகை டிஸ்கோ சாந்தி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மகள் அக்ஷரா மரணம் அடைந்து விட்டதால், அவள் நினைவாக அக்ஷரா பவுண்டேஷன் தொடங்கி ஆந்திராவில் பின்தங்கிய 3 கிராமங்களை தத்தெடுத்து உதவிகள் செய்து வந்தார். 

மறைந்த ஸ்ரீஹரியின் இறுதி சடங்கு ஆந்திராவில் இன்று நடக்கிறது. தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ள ஸ்ரீஹரி, தமிழில் ‘பரதன்’, ‘வேட்டைக்காரன்’, ‘மார்கண்டேயன்’, ‘மாவீரன்’ (‘மஹதீரா’) ஆகிய படங்களில் நடித்துள்ளார். ராம்சரண் நடித்த ‘தூஃபான்‘ (சன்ஜீர்), ஸ்ரீஹரி நடித்த கடைசி படமாகும்.

No comments :

Post a Comment