ஈழத்தமிழர்கள் நடித்துள்ள யாழ்

No comments
 மிஸ்டிக் பிலிம்ஸ் சார்பில் ஆஸ்திரேலியா தமிழர் எம்.எஸ்.ஆனந்த் இயக்கி தயாரிக்கும் படம், ‘யாழ்’. வினோத், டேனியல் பாலாஜி, சசி, லீமா, நீலிமா, மிஷா உட்பட பலர் நடிக்கின்றனர்.

 ஒளிப்பதிவு: கருப்பையா, நசீர். இசை, எஸ்.என்.அருணகிரி. படம் பற்றி நிருபர்களிடம் ஆனந்த் கூறியதாவது: பாணர்கள் யாழ் மூலம் சைவ சித்தாந்த கருத்துகளையும், தமிழர்களின் கலை மற்றும் கலாசாரம், பண்பாட்டையும் ஊர் ஊராகச் சென்று பரப்பினார்கள். 

யாழ்ப்பாணம் என்று பெயர் வந்ததே இந்த அடிப்படையில்தான் என்கிறார்கள். இப்படத்தின் கதைக்களம் இலங்கை. இந்திய மற்றும் தமிழ் நடிகர்கள் யாரும் இல்லாமல், ஈழத் தமிழர்கள் மட்டுமே நடித்துள்ளனர்.

 பாடல்களும் ஈழத் தமிழிலேயே இடம்பெறுகிறது. யாழ் இசையும், யாழ் கலை மற்றும் கலாசாரமும் படத்தில் சம்பந்தப்பட்ட கேரக்டர்களுக்கு இடையே முக்கியத்துவம் பெறுகிறது. தவிர, இலங்கையில் நடந்த இறுதிப் போரில் என்ன நடந்தது என்பதை படம் சொல்கிறது. அடுத்த மாதம் ரிலீசாகிறது.

No comments :

Post a Comment