அடுத்த குழந்தை எப்போது? ஐஸ்வர்யா ராய் பதில்

No comments
அடுத்த குழந்தை எப் போது என்றதற்கு ஐஸ்வர்யா ராய் பதில் அளித்தார். அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் ஜோடிக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நேற்று ஐஸ்வர்யாராய் ஸ்டெம் செல் பற்றிய விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்றார்.


 அவரிடம், அடுத்த குழந்தை எப்போது? என்று மறைமுகமாக நிருபர்கள் கேட்டபோது பதில் அளித்தார். அவர் கூறும்போது,‘நீங்கள் என்ன கேட்க வருகிறீர்கள் என்பது புரிகிறது. அதுபோன்ற ஒரு தருணம் வரும்போது நிச்சயம் உங்களுக்கு தெரியும். அதுவரை இதுபோன்ற எனது சொந்த வாழ்க்கைபற்றி வதந்தி பரப்பாதீர்கள். மாற்றம் தான் வாழ்க்கையில் நிரந்தரம். ஒவ்வொரு அனுபவமும் மாற்றத்தையும் வளர்ச்சியையும் தருகிறது. தாய்மை என்ற ஆசியை கடவுள் எனக்கு தந்திருக்கிறார். 

ஆராத்யா எங்கள் வாழ்வில் கிடைத்த பெரிய வரப்பிரசாதம். ஸ்டெம் செல் விழிப்புணர்வு பற்றி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது சந்தோஷம் இதுபற்றிய விழிப்புணர்வு எனக்கு திருமணத்துக்கு முன்பிருந்தே இருந்தது. 

இந்திய மக்களுக்கு இதுவொரு புதிய விஷயமாக இருந்தாலும் இதுபற்றி ஒவ்வொருவரும் தெரிந்துகொள்வது மிக அவசியம். இந்நிகழ்ச்சியில் நான் பங்கேற்றிருப்பதும், அதுபற்றி விழிப்புணர்வு பிரசாரம் செய்வதிலும் சந்தோஷம் அடைகிறேன் என்றார்.

No comments :

Post a Comment