புதுபடம் ரிலீஸ் ஆகாததால் பிரியாமணி அப்செட்
தான் நடித்த புதுப்பட ரிலீசை ஆவலோடு எதிர்பார்த்த பிரியாமணி, அந்த படம் ரிலீஸ் ஆகாததால் அப்செட் ஆனார். ‘பருத்தி வீரன்‘, ‘அது ஒரு கனாகாலம்‘, ‘மலைக்கோட்டை‘ உள்பட தமிழில் பிரியாமணி நடித்த படங்கள் அவருக்கு நல்ல நடிகை என பெயர் பெற்றுத் தந்தன.
ஆனால் பட வாய்ப்புகளை அள்ளித் தரவில்லை. இதையடுத்து முழுகவனத்தையும் தெலுங்கு படங்களில் திருப்பினார். டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து படுகவர்ச்சியாக நடித்ததுடன் முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டார். ஆனால் படவாய்ப்புகள் குவியாததால் ஏமாற்றம் தான் மிஞ்சியது. இதையடுத்து மலையாளம், கன்னடத்தில் நடிக்கத் தொடங்கினார்.
இதற்கிடையில், ஷாருக்கான் நடித்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்‘ படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடும் வாய்ப்பு வந்தது.
அதுவும் அவருக்கு பெயரை பெற்று தந்தது. ஆனால் வாய்ப்புகள் வரவில்லை. இதையடுத்து தெலுங்கில் அவர் நடித்த ‘சண்டி‘ என்ற படத்துக்காக சண்டை பயிற்சி பெற்று நடித்தார். இப்படம் நேற்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்ப பிரச்னை காரணமாக திடீரென்று ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தார் இயக்குனர் சமுத்ரா. ரிலீசை எதிர்பார்த்து காத்திருந்த பிரியாமணி இதனால் அப்செட் ஆனார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment