முன்னணி ஹீரோவுடன் நடிக்க அனுஷ்கா சர்மா மறுப்பு
முன்னணி ஹீரோவுடன் நடிக்க அனுஷ்கா சர்மா மறுப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘கோச்சடையான்‘ படத்தில் ரஜினி ஜோடியாக பாலிவுட் ஹீரோயின் தீபிகா படுகோன் நடிக்கிறார். அவரை தங்களது படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய கோலிவுட், டோலிவுட் தயாரிப்பாளர்கள் கால்ஷீட் கேட்டபோது அதிகபட்ச சம்பளம் கேட்டார்.
இதைக்கேட்டு ஷாக் ஆன தயாரிப்பாளர்கள் வேறு ஹீரோயினை தேட ஆரம்பித்தனர். பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகை அனுஷ்கா ஷர்மா. இவரை தங்களது படங்களில் ஒப்பந்தம் செய்ய கோலிவுட் ஹீரோக்கள் மற்றும் டோலிவுட் ஹீரோக்கள் மகேஷ்பாபு, ஜூனியர் என்டிராமராவ் உள்ளிட்டோர் விருப்பம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இயக்குனர் ஹரிஸ் ஷங்கர் இயக்கும் படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கிறார். இதில் அனுஷ்கா ஷர்மாவை ஒப்பந்தம் செய்ய அவரிடம் தயாரிப்பாளர் பேசினார். சம்பளம் மற்றும் கால்ஷீட் பிரச்னையை காரணம்காட்டி நடிக்க மறுத்துவிட்டாராம்.
சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா போன்றவர்கள் தங்கள் சம்பளத்தை ஒரு கோடி வரை உயர்த்தி உள்ளனர். அவர்கள்கேட்கும் சம்பளத்தைபோல் 3 மடங்கு சம்பளம் கேட்டு அனுஷ்கா ஷர்மா ஹீரோக்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment