வயதான ஹீரோவுடன் நடிக்க அஞ்சலி சம்மதம்

No comments
வயதான ஹீரோக்களுடன் நடிக்க அஞ்சலி கால்ஷீட் தாராளமாக கிடைப்பதால் அவருக்கு மவுசு கூடுகிறது. மூத்த ஹீரோக்களுடன் நடிக்க காஜல் உள்ளிட்ட ஹீரோயின்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

 டோலிவுட்டில் மகேஷ்பாபு, வெங்கடேஷ் நடித்த ‘சீதம்மா வாகிட்லோ சிறுமல்லே செட்டு‘ என்ற படத்தில் மகேஷ்பாபுடன் ஜோடியாக நடிக்க பல ஹீரோயின்கள் போட்டிபோட்டனர். 

அதேபடத்தில் நடித்த மூத்த நடிகர் வெங்க டேஷ் ஜோடியாக நடிக்க கேட்டபோது மறுத்துவிட்டனர். கடைசியாக ‘அங்காடி தெரு‘ அஞ்சலி நடிக்க சம்மதித்தார். இதுவெற்றி படமாக அமைந்தது. இதையடுத்து அஞ்சலிக்கு டோலிவுட் படங்களில் வரவேற்பு அதிகரித்தது.

 இந்நிலையில் இந்தியில் வெளியான அபிஷேக் பச்சன், அஜய் நடித்த ‘போல்பச்சான்‘ என்ற இந்தி படம் தெலுங்கில் ‘மசாலா‘ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் வெங்கடேஷ், ராம் நடிக்கின்றனர். இப்படத்திலும் வெங்கடேஷ் ஜோடியாக நடிக்க பல ஹீரோயின்கள் மறுத்துவிட்டனர். 

இதையடுத்து மீண்டும் அஞ்சலியிடமே கால்ஷீட் கேட்கப்பட்டது. உடனடியாக அவர் நடிக்க ஒப்புக்கொண்டார். இதுபற்றி அஞ்சலி கூறும்போது,‘வெங்கடேஷ் ஜோடியாக நான் நடித்த சீதம்மா வாகிட்லோ படம் வெற்றிபெற்றதுபோல் இந்த படமும் வெற்றி பெறும்‘ என்றார்.

No comments :

Post a Comment