பிந்து மாதவியால் பேமிலியில் பிரச்னை: பயந்து ஓடும் ஹீரோக்கள்

No comments
பிந்து மாதவியால் குடும்பத்தில் பிரச்னை வருவதால் அவரை படத்துக்கு ஒப்பந்தம் செய்ய ஹீரோக்கள் தயங்குகிறார்களாம். விமலுடன் தேசிங்கு ராஜா, சிவகார்த்திகேயனுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படங்களில் நடித்தார் பிந்து மாதவி. 

இரண்டு படங்களுமே ஹிட். இதையடுத்து இதேபோல் குறிப்பிட்ட சில படங்களில் நடிக்க பிந்து மாதவிக்கு வாய்ப்புகள் காத்துக்கொண்டிருந்தது. ஆனால் திடீரென அந்த வாய்ப்புகள் பறிபோனது. 

லட்சுமி மேனன், ஸ்ரீ திவ்யா உள்ளிட்ட நடிகைகள் அந்த வாய்ப்புகளை தட்டிச் சென்றனர். இதற்கு காரணம், அப்பட ஹீரோக்கள்தானாம். தேசிங்கு ராஜா படத்தில் நடித்தபோது விமலுடனும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தபோது சிவகார்த்திகேயனுடனும் கிசு கிசுவில் சிக்கினார் பிந்து மாதவி.

 எனக்கு ஒரு மனைவி இருக்கிறார். அவரை மட்டும்தான் நான் காதலிக்கிறேன் என கோலிவுட் முழுக்க ஸ்பீக்கர் வைத்து அறிவித்தார் சிவகார்த்திகேயன். பிந்துவுடன் நட்பு கூட கிடையாது என விமலும் தனது குடும்பத்தாரை சமாதானப்படுத்தினாராம். இப்படி பேமிலியில் பிரச்சினை வருவதாலேயே பிந்து மாதவியே வேண்டாம் என ஹீரோக்கள் பயந்து ஓடுகிறார்களாம்.

No comments :

Post a Comment