அதர்வா படத்திலிருந்து லட்சுமிராய் நீக்கம்

No comments
அதர்வா படத்திலிருந்து லட்சுமிராய் திடீரென நீக்கப்பட்டுள்ளார். பரதேசி படத்தையடுத்து அதர்வா நடிக்கும் படம் இரும்பு குதிரை. பிரியா ஆனந்த் ஹீரோயின். இப்படத்தை யுவராஜ் டைரக்டு செய்கிறார்.

 ஆக்ஷன் கதையாக உருவாகும் இப்படத்தில் பைக் சாகச வீராங்கனையாக லட்சுமிராய் நடிப்பதாக சொல்லப்பட்டது. இதற்காக அவர் பைக் ஓட்டும் பயிற்சி எடுத்தார். இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. 

அதர்வா, பிரியா ஆனந்த் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. ஆனால் லட்சுமிராய்க்கு ஷூட்டிங்கிலிருந்து அழைப்பு வரவில்லை. இது பற்றி பட தரப்பில் விசாரித்தபோது லட்சுமிராய் இப்படத்தில் நடிக்கவில்லை என்றனர். இதைக்கேட்டு லட்சுமிராய் ஷாக் ஆனாராம்.

 படத்திலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக அவரிடம் எதுவும் தகவல் கூறவில்லையாம். திடீரென இது பற்றி அறிந்த லட்சுமி, நெருங்கிய நண்பர்களிடம் இப்படி செய்துவிட்டார்களே என புலம்பி வருகிறாராம்.

No comments :

Post a Comment