மலேசியாவில் இளையராஜா இசை நிகழ்ச்சி

No comments
மலேசியாவில் டிசம்பர் 28,ம் தேதி இளையராஜா இசை நிகழ்ச்சி நடக்கிறது. ‘கிங் ஆப் கிங்’ என்ற தலைப்பில் கார்த்திக் ராஜா இதை நடத்துகிறார். 

இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

அப்பா (இளையராஜா) உலகம் முழுவதும் இப்போது இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அவரது நிகழ்ச்சியை புதுமையான முறையில் நாங்கள் நடத்த முடிவு செய்தோம். வெங்கட்பிரபுதான் இந்த கான்செப்டை உருவாக்கினார்.

 80,களில் வெளிவந்து ஹிட்டான அப்பாவின் பாடல்களை சின்ன சின்ன மாற்றங்களுடன் முன்னணி பாடகர், பாடகிகளும் பாட இருக்கிறார்கள். அப்பாவுடன் பணியாற்றிய இயக்குனர்கள், நடிகர், நடிகைகளை அழைத்திருக்கிறோம். 

மலேசியாவை அடுத்து இதே நிகழ்ச்சியை சென்னையிலும் நடத்த இருக்கிறோம். இவ்வாறு கார்த்திக் ராஜா கூறினார். பேட்டியின்போது வெங்கட்பிரபு, பவதாரிணி, வாசுகி பாஸ்கர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மை ஈவன்ட் ஆதி ஆகியோர் உடனிருந்தனர்.


No comments :

Post a Comment