பட வாய்ப்பு இல்லாததால் பிரியாமணிக்கு மாப்பிள்ளை பார்க்கும் பெற்றோர்

No comments
பட வாய்ப்பு இல்லாததால் பிரியாமணிக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்துள்ளனர். பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமானவர் பிரியாமணி. தொடர்ந்து பருத்திவீரன், அது ஒரு கனாகாலம், மலைக் கோட்டை, ஆறுமுகம் போன்ற படங்களில் நடித்து வந்தார். 

தமன்னா, ஹன்சிகா, நஸ்ரியா போன்ற நடிகைகளின் வரவால் பிரியாமணிக்கு கோலிவுட்டில் வாய்ப்பு கைநழுவியது. இதையடுத்து தெலுங்கு, கன்னட படங்களில் கவனம் செலுத்தி வந்தார். எதிர்பார்த்தளவுக்கு படங்கள் குவியவில்லை. 

இந்நிலையில் ஒரு பாடலுக்கு வந்த வாய்ப்பை ஏற்று சென்னை எக்ஸ்பிரஸ் என்ற இந்தி படத்தில் குத்தாட்டம் ஆடினார். தற்போது அவருக்கு தமிழில் கைவசம் படம் எதுவும் இல்லை. பட வாய்ப்புகள் குறைந்ததையடுத்து பிரியாமணிக்கு திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

 ஒரு சில ஹீரோக்களுடன் இணைத்து பிரியாமணி கிசுகிசுக்கப்பட்டாலும் யாரையும் காதலிக்கவில்லை என்று அவரே ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்தார். இதையடுத்து பிரியாமணிக்கு பொருத்தமான மாப்பிள்ளையை பெற்றோர் தேடி வருகின்றனர்.


No comments :

Post a Comment