எளிமையாக நடந்த ரீமா- ஆஷிக் அபு திருமணம்
பிரபல மலையாள நடிகை ரீமா கல்லிங்கலுக்கும், இயக்குநர் ஆஷிக் அபுவுக்கும் இன்று திருமணம் நடந்தது.
ரிது என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமான இவர் கேரளா கபே, நீலதாமர, ஹேப்பி ஹஸ்பன்ட்ஸ், கோ உள்பட பல படங்களில் நடித்து புகழ்பெற்றார்.
கடந்த ஆண்டு இவர் நடித்த 22 பீமேள் கோட்டயம் படத்தை டைரக்டர் ஆஷிக் அபு இயக்கி இருந்தார்.
படப்பிடிப்பின் போது இருவருக்கு மிடையே காதல் மலர்ந்தது.
இருவரும் ஒன்றாக சேர்ந்து சுற்றுவதாக செய்திகள் வெளிவந்தன, இதை இருவருமே மறுக்கவில்லை.
இந்நிலையில் ரீமா கல்லிங்கல்- ஆஷிக்அபு திருமணம் இன்று கொச்சி அருகே காக்கநாடு பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது.
இருவரும் மாலை மாற்றி பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
இருவரின் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
முன்னதாக ரீமா கல்லிங்கல் நேற்று எர்ணாகுளத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று, புற்று நோயாளிகளின் மருத்துவ செலவுக்காக ரூ.10 லட்சத்தை மருத்துவ கண்காணிப்பாளரிடம் வழங்கினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த தொகை பெரிதல்ல என எனக்கு தெரியும்.
ஆனால் எங்கள் மன திருப்திக்காக இந்த தொகையை வழங்குகிறோம்.
திருமணத்தின்போது செய்த ஒரு நல்ல விஷயமாக இருக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment