ரம்யாவுக்கும் அஜித்துக்கும் கல்யாணம்!
விஜய் தொலைக்காட்சியின் அழகுத் தொகுப்பாளினி ரம்யாவிற்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ‘கிங் க்வீன் ஜாக்' என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் ரம்யா.
பின்னர் வாய்ப்புகளும் குவிந்ததோடு ரம்யாவுக்கு ரசிகர்களும் குவிந்தனர்.
விசுவல் மீடியா படித்துள்ள இவர் இதுவரை சீரியல் வாய்ப்புகளையும், சினிமா வாய்ப்பினையும் தவிர்த்தே வந்திருக்கிறார்.
இந்நிலையில் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாம்.
அப்பா, அம்மா பார்த்து வைத்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ளப் போகிறாராம்.
மாப்பிள்ளை பெயர் அஜித். லண்டனில் எம்.எஸ் சட்டம் மற்றும் பொருளாதாரத்தில் பட்ட மேற்படிப்பு படித்திருக்கிறாராம்.
லண்டன் மாப்பிள்ளையாக இருந்தாலும் சென்னையை விட்டு போகமாட்டாராம்.
அஜித்துக்கும் சென்னைதான் ரொம்ப பிடிக்குமாம். அதைவிட ரம்யாவின் நிகழ்ச்சிகள் ரொம்ப ரொம்ப பிடிக்குமாம்.
பிப்ரவரியில் திருமணம் நடைபெற உள்ளது, அதற்கு முன்னதாக திருமண நிச்சயம் நடைபெற்றுள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment