2 படங்களை இயக்கும் ஜெய் ஆகாஷ்

No comments
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் சார்பில் கணேஷ் தொண்டி, என்.ஜே.சதீஷ் தயாரிக்கும் படங்கள் ‘ஆனந்தம் ஆரம்பம்’, ‘லவ் இன் மலேசியா’.

 இந்தப்படங்களை ஜெய் ஆகாஷ் இயக்கி, ஹீரோவாக நடிக்கிறார். ‘ஆனந்தம் ஆரம்பம்’ படத்தில் ஏஞ்சல் சிங், ஜியாகான், அலக்கியா, மான்சி, ரம்யா ஹீரோயின்கள். ‘லவ் இன் மலேசியா’வில் ஹீரோ, வில்லன் என ஜெய் ஆகாஷ் 2 வேடங்களில் நடிக்கிறார். 

 2 படங்களுக்கும் தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, சுமன் இசையமைக்கிறார். இதுபற்றி நிருபர்களிடம் ஜெய் ஆகாஷ் கூறியதாவது: காமெடி கலந்த கதையாக ‘ஆனந்தம் ஆரம்பம்’ படமும் ஆக்ஷன் கதையாக ‘லவ் இன் மலேசியா‘வும் உருவாகியுள்ளது. 2 படங்களையும் ஜனவரியில் ரிலீஸ் செய்கிறோம்.

 14 வருடமாக சினிமாவில் நல்ல இடத்தைப் பிடிக்க போராடி வருகிறேன். என்னை நிலைநிறுத்தவே இயக்கி நடிக்கிறேன்.

No comments :

Post a Comment