ஸ்டண்ட் இயக்குனர் ஆனார் வித்யூத்

No comments
விஜயின் ‘துப்பாக்கி’ படத்தில் வில்லனாக நடித்தவர் இந்தி நடிகர் வித்யூத் ஜாம்வால். அஜீத்தின் ‘பில்லா 2’ படத்திலும் நடித்திருந்தார். இவர் மும்பையின் தாராவி பகுதியில் உள்ள தமிழ் இளைஞர்கள் மற்றும் கேரள இளைஞர்களை கொண்டு சண்டை காட்சிகள் அமைக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார்.

 இந்த கலைஞர்களை கொண்டு ‘புல்லட் ராஜா’ என்ற படத்துக்கு சண்டை காட்சிகளை அமைத்துள்ளார் வித்யூத். இதுபற்றி அவர் கூறியதாவது:பத்து வயதில் இருந்து களறி கற்று வந்திருக்கிறேன். இந்திய தற்காப்பு கலை சண்டை பயிற்சியை பெற்றுள்ளதால் சண்டை காட்சிகளை அமைக்கும் நிறுவனத்தை தொடங்கினேன்.

 இதன் மூலம் சில படங்களுக்கு ஏற்கனவே சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளேன். முதன்முறையாக, ‘புல்லட் ராஜா’ படத்தில்தான் எனது பெயரை விளம்பரபடுத்துகிறார்கள்.இவ்வாறு வித்யூத் சொன்னார்.

No comments :

Post a Comment