பர்த்டே விழாவுக்கு ஷாருக் அழைப்பு நிராகரித்தார் பிரியாமணி
பாலிவுட் ஹீரோ ஷாருக்கான் அனுப்பிய பிறந்த நாள் விழா அழைப்பை நிராகரித்தார் பிரியாமணி. தமிழ் படங்கள் கைவசம் ஒன்றும் இல்லாத நிலையில் தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருகிறார் பிரியாமணி. இவருக்கு ஷாருக்கான் தயாரித்து, நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் குத்து பாடலில் ஆட அழைப்பு வந்தது.
அதை ஏற்றுக்கொண்டார். படம் வெளியாகி பெரிய ஹிட் ஆனது. ஆனாலும் பிரியாமணிக்கு பாலிவுட் வாய்ப்புகள் எதுவும் கைக்கு வரவில்லை.
இதனால் விரக்தி அடைந்தார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் ஷாருக்கான் தனது 48வது பிறந்த நாளை கொண்டாடினார். தென்னிந்திய நடிகைகளில் பிரியாமணிக்கு மட்டும் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் அந்த விழாவுக்கு போகாமல் பிரியாமணி புறக்கணித்துவிட்டார்.
இதுபற்றி பிரியாமணி தரப்பில் கேட்டபோது, தெலுங்கு, கன்னடத்தில் தலா 2 படங்களும், கன்னடத்தில் ஒரு படமும் நடித்து வருகிறார்.
ஷூட்டிங்கில் பிஸியாக இருந்ததால் ஷாருக்கான் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. ஆனாலும் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து ஆடிய நடன போட்டோவை இணைய தளத்தில் வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இருக்கிறார் என்றனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment