அக்கா கல்யாணத்தில் காதலனை தேர்வு செய்த நடிகையின் மகள்

No comments
நடிகை ஹேமமாலினியின் 2வது மகள் தனது அக்கா கல்யாணத்தில் காதலனை தேர்வு செய்தார். பாலிவுட் கனவு கன்னியாக திகழ்ந்தவர் ஹேமமாலினி. தர்மேந்திராவின் மனைவி. இவர்களுக்கு இஷா தியோல், அஹானா தியோல் என்ற 2 மகள்கள் உள்ளனர். 

நடிப்பில் முயற்சி செய்த இஷா தாயைப்போல் ஜொலிக்க முடியவில்லை. இதையடுத்து மகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார் ஹேமமாலினி. மும்பை தொழில் அதிபர் பரத் தகஹட்னிக்கு இஷா தியோலை மண முடித்தார். இந்த திருமணத்திற்கு வந்திருந்த வைபவ் என்பவரை அஹானா சந்தித்தார். பார்த்த மாத்திரத்தில் இருவரும் காதல் வலையில் விழுந்ததுடன் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். 

இதுபற்றி ஹேமமாலினியிடம் அஹானா தெரிவித்தார். அவரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். இது பற்றி ஹேமமாலினி கூறும்போது, இஷா திருமணத்தின்போது வைபவை அஹானா சந்தித்தார். திருமணம் செய்ய விரும்பினர். ஏற்றுக்கொண்டோம். சினிமா டைரக்டர் ஆவது அஹானாவின் கனவாக இருந்தது. 

அவர் தொடர்ந்து அதற்கான முயற்சியில் ஈடுபடுவாரா என இப்போது எதுவும் சொல்ல முடியாது. கடந்த ஜூன் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இருவீட்டு குடும்பத்தாரும் பங்கேற்றோம் என்றார்.

No comments :

Post a Comment