அனுஷ்காவுக்கு ஸ்பெஷல் கிரீடம்! (படம்)

No comments
அனுஷ்காவுக்காக ஒரு வருட ஆராய்ச்சி செய்து ஸ்பெஷல் டிசைனில் கிரீடம், வாள் தயாரிக்கப்பட்டது.13ம் நூற்றாண்டை சேர்ந்த காகத்திய அரச குலத்தை சேர்ந்த பெண் வீராங்கனை ராணி ருத்ரம்மா தேவியாக நடிக்கிறார் அனுஷ்கா.

 3டி வடிவில் தமிழ், தெலுங்கில் இப்படம் உருவாகிறது. குணசேகர் டைரக்ஷன் செய்கிறார். 


இப்படத்தில் அனுஷ்காவின் காஸ்டியூம், கிரீடம் உள்ளிட்டவைகளை உருவாக்க ஒரு வருட ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இது பற்றி இயக்குனர் குணசேகர் கூறும்போது,‘ராணி ருத்ரம்மா தேவியாக நடிக்கும் அனுஷ்காவின் நகைகள், ஆடைகள், மேக்கப் மற்றும் கிரீடம், போர் வாள் உள்ளிட்டவைகளுக்கு வரலாற்று வல்லுனர்களின் உதவியுடன் 1 வருட ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. 

 அதன் அடிப்படையிலேயே அவரது உடை, ஆபரணம் உள்ளிட்டவைகள் வடிவமைக்கப்பட்டது. இதற்காக சிறுசிறு விஷயத்தில்கூட கவனம் செலுத்தப் பட்டது. இதன் ஷூட்டிங் 50 சதவீதம் முடிந்திருக்கிறது. இம்மாதம் 16ம் தேதி முதல் அடுத்த கட்ட ஷூட்டிங் தொடங்கப்பட உள்ளது என்றார்.

No comments :

Post a Comment