நடிகர் சந்தானம் வருமானவரித் துறையினர் சோதனை

No comments

காமெடி நடிகர் சந்தானம் மற்றும் சினிமா தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, ஏ.எம்.ரத்னம் வீடுகளிலும், அலுவலகங்களிலும் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். ஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்தது. சந்தானம் வீடு தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரி எதிரில் இருக்கிறது. அங்கு வருமான வரி அதிகாரிகளில் ஒரு குழுவினர் சென்றனர். 


கேட்டை மூடிக்கொண்டு வீட்டில் அறை அறையாக சென்று சோதனை நடத்தினார்கள். தஸ்தாவேஜுகளையும் கைப்பற்றி ஆய்வு செய்தார்கள். தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி அலுவலகம் தியாகராய நகரில் உள்ளது. அங்கு வருமான வரிதுறையின் இன்னொரு அதிகாரிகள் குழுவினர் சென்று சோதனை நடத்தினார்கள். பாண்டி பஜார் தணிகாசலம் சாலையில் உள்ள தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அலுவலகத்திலும், சாலி கிராமத்தில் உள்ள தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் வீட் டிலும் சோதனை நடந்தது. சென்னையில் மொத்தம் 23 இடங்களில் சோதனை நடந்தது.

 இதுதவிர கோவை, சேலத்தில் 6 இடங்களில் சோதனை நடந்தது. சேலம் புதிய பஸ்நிலையம் பகுதியில் உள்ள சினிமா நகரில் உள்ள பட தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, அசோக் சாம்ராஜ் ஆகியோரின் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை, கோவையில் இருந்து வந்திருந்த 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திராவில் உள்ள ஒரு தயாரிப்பாளர் வீட்டிலும் சோதனை நடந்தது. இதில் சொத்து ஆவணங்கள் மற்றும் முக்கிய தஸ்தாவேஜுகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. 

சந்தானம் தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக உள்ளார். 2002–ல் இருந்து நடித்து வருகிறார். அவர் நடித்த ‘ஆல் இன் அல் அழகுராஜா’ படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. மேலும் 15 புதுப்படங்களில் நடித்து வருகிறார். தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி தற்போது விஜய், மோகன்லால் நடிக்கும் ‘ஜில்லா’ படத்தை தயாரித்து வருகிறார். இப்படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா முன்னணி பட அதிபராக தயாரிப்பாளர் சங்கத்திலும் செயலாளர் பொறுப்பு வகிக்கிறார். ஏ.எம்.ரத்னமும் முன்னணி தயாரிப்பாளராக உள்ளார். இவர் அஜீத்தை வைத்து தயாரித்த ‘ஆரம்பம்’ படம் நேற்று ரிலீசானது


No comments :

Post a Comment