பொங்கலுக்கு சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான்!- இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் பல கோடி ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சி தரும் செய்தியாக இது அமைந்துள்ளது.கோச்சடையான் படத்துக்கு பல சிறப்புகள் உண்டு. இந்தப் படம்தான் இந்தியாவின் முதல் மோஷன் கேப்சரிங் 3டி படம். ரூ 100 கோடியில் பல நாட்டு தொழில்நுட்ப நிபுணர்களின் உழைப்பில் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் மதுரையை தலைநகராகக் கொண்டு தர்ம ஆட்சி செலுத்திய மன்னன் கோச்சடையான் மற்றும் அவர் மகன் இளவரசன் ராணா ஆகிய இரு வேடங்களில் வருகிறார் ரஜினி.
ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார்இ ஷோபனாஇ ருக்மணிஇ நாசர்இ ஜாக்கி ஷெராப் என பெரும் நடிகர் பட்டாளமே நடித்துள்ளது.
இந்தப் படத்தின் கதைஇ திரைக்கதைஇ வசனம் மற்றும் இயக்க மேற்பார்வை பொறுப்பை கேஎஸ் ரவிக்குமார் கவனித்தார். ரஜினிஇ தீபிகா நடித்த நிஜ காட்சிகள் அனைத்தையும் இவர் மேற்பார்வையிலேயே இயக்குநர் சௌந்தர்யா படமாக்கினார்.
சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற்று ரஜினி திரும்பிய பிறகு சில மாதங்கள் கழித்து இந்தப் படத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. லண்டனில் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பின்னர் கேரளாவிலும் சென்னை ஸ்டுடியோக்களிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தமிழ்இ இந்திப் பதிப்புகளுக்கு ரஜினியே சொந்தக் குரலில் டப்பிங் பேசினார்.
ஜப்பான் மொழியில் வெளியாகும் கோச்சடையானுக்காகஇ ஜப்பானிய மொழி கற்று படத்தில் சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளார் ரஜினி. ஏ ஆர் ரஹ்மான் இசையில் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலையும் தமிழ்இ இந்தியில் ரஜினி பாடியுள்ளார்.
தெலுங்கில் இந்தப் படத்துக்கு விக்ரம் சிம்ஹா என்று தலைப்பிட்டுள்ளனர். தெலுங்கில் மிகப் பெரிய அளவில் இந்தப் படம் வெளியாகிறது. தெலுங்கானா பிரச்சினையில் தெலுங்கு நடிகர்களின் படங்கள் வெளியாகாமல் தவிப்பதால்இ எந்தப் பிரச்சினையும் இல்லாத கோச்சடையானை வெளியிடுவதில் ஆந்திர சினிமா விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
படத்தின் அனைத்து வேலைகளும் தற்போது முடிந்துவிட்டன. ஒரு டீசர் மற்றும் ஒ
ரே ஒரு பாடலின் ஒலி டீசர் மட்டுமே இப்போதைக்கு வெளியில் வந்துள்ளது. இதில் பாடல் டீசர் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தப் படத்தின் முழுமையான இசையை கடந்த அக்டோபரில் வெளியிடுவதாகக் கூறியிருந்தார்கள். இப்போது டிசம்பர் மாதம் ஆடியோ ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.
வரும் பொங்கல் பண்டிகையையொட்டிஇ ஜனவரி 10-ம் தேதியே கோச்சடையானை வெளியிட திட்டமிட்டுள்ளோம். விளம்பர வேலைகள் டிசம்பரில் தொடங்கும்இ' என்று அறிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment