விழா இல்லாமல் ஜில்லா ஆடியோ வெளியிட விஜய் முடிவு

No comments
ஜில்லா பட ஆடியோவை விழா எதுவும் இல்லாமல் நேரடியாக வெளியிட முடிவு செய்திருக்கிறார் விஜய். துப்பாக்கி, தலைவா படங்களையடுத்து விஜய் நடிக்கும் படம் ஜில்லா. காஜல் அகர்வால் ஹீரோயின். விஜய் தந்தையாக மோகன்லால் நடிக்கிறார். 

டி.இமான் இசை. ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். இப்படம் பொங்கல் தினத்தையொட்டி வரும் ஜனவரி 10ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெறுகிறது. வழக்கமாக விஜய் நடிக்கும் படங்களின் ஆடியோ வெளியிட விழாக்கள் நடத்தப்படும். இப்படத்தை பொறுத்தவரை பாடல் வெளியீடு என்பது மிக எளிமையாக நடந்தால் போதும் என்று விஜய் கேட்டுக்கொண்டார். 

 இதையடுத்து தயாரிப்பாளர் சவுத்ரி விழா ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை. வரும் 22ம்தேதி தமிழ்நாடு முழுவதும் கடைகளில் நேரடியாக ஜில்லா ஆடியோ விற்பனைக்கு வரவுள்ளது. இதற்கிடையில் இப்படத்துக்காக ஐதராபாத்தில் பிரமாண்டமான செட் அமைத்து அதில் விஜய், மோகன்லால் இருவரும் இணைந்து 40 ஸ்டன்ட் கலைஞர்களுடன் மோதிய ஸ்டன்ட் காட்சி படமாக்கப்பட்டது. இப்படத்தையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளார்.

No comments :

Post a Comment