இந்தியில் ரீமேக் : ரமணா படத்தில் ஸ்ருதிஹாசன்

No comments
3 ஹீரோயின்களை பின்னுக்கு தள்ளிவிட்டு ரமணா ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் ஸ்ருதி ஹாசன். தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த், சிம்ரன் நடித்த படம் ‘ரமணா‘. இப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. ‘கப்பர்‘ என்று பெயரிடப்பட்டுள்ளது. அக்ஷய் குமார் நடிக்கிறார்.

 கிரிஷ் இயக்குகிறார். இதில் ஹீரோயினாக நடிக்க இலியானா, அமலா பால் மற்றும் பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகள் ஷரத்தா கபூர் ஆகியோரிடம் பேசப்பட்டது. ஆனால் மூவருமே பொருத்தமான தேர்வாக அமையவில்லை. இதையடுத்து ஸ்ருதி ஹாசனை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அவரிடம் கால்ஷீட் கேட்டபோது ஒட்டுமொத்தமாக கால்ஷீட் தர ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் தேர்வு செய்யப்பட்டார். 

 ஏற்கனவே 3 ஹீரோயின்களை இயக்குனர் அணுகுவதற்கு முன்பே ஸ்ருதியிடம்தான் முதலில் கிரிஷ் கால்ஷீட் கேட்டிருந்தார். அப்போது அவரால் கால்ஷீட் ஒதுக்கி தர முடியாமல் இருந்ததால் அவருக்கு வாய்ப்பு நழுவியது. நழுவிய வாய்ப்பு தற்போது மீண்டும் கைகூடி இருக்கிறது.

No comments :

Post a Comment