பிரியா ஆனந்துக்கு 3 கெட்அப்

No comments
‘எதிர்நீச்சல்‘, ‘வணக்கம் சென்னை‘ படங்களில் நடித்திருக்கும் பிரியாஆனந்த் அடுத்து கண்ணன் இயக்கும் புதிய படத்தில் விமல் ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தில் அவர் 3 விதமான தோற்றங்களில் வருகிறார்.

மதுரை பெண்ணாக நடிக்கும் அவருக்கு எந்தவிதமான தோற்றங்கள் இருந்தால் பொருத்தமாக இருக்கும் என்பதற்காக மேக் அப் டெஸ்ட் எடுக்கப்பட்டது. தாவணி, சேலை, சுடிதார் உள்ளிட்ட 7 விதமான காஸ்டியூம்கள் அணிந்து ஸ்டில்கள் எடுக்கப்பட்டது.

 இவற்றிலிருந்து 3 கெட்அப் தேர்வு செய்யப்பட்டது. ஹீரோ விமலும் இதுவரை கெட்அப் மாற்றி நடித்ததில்லை என்பதால் அவருக்கும் புதிய கெட்அப் தேர்வு செய்யப்படுகிறது. இப் படம் முழுவதும் ரயிலேயே படமாக இருப்பதால் அதற்கான பர்மிஷன் வாங்கும் பணியில் பட குழு பிஸியாக உள்ளது.

No comments :

Post a Comment