விவசாயி ஆனார் கிஷோர்

No comments
வில்லன் நடிகர் கிஷோர் விவசாயி ஆனார்.‘பொல்லாதவன், ‘சிலம்பாட்டம், ‘தோரணை, வெண்ணிலா கபடி குழு படங்களில் வில்லன், குணசித்ர வேடங்களில் நடித்திருப்பவர் கிஷோர். அவர் கூறியதாவது நல்ல சினிமா என்றுமே என்னை கவர்ந்திருக்கிறது.

 நான் நடிகனாக இருந்தாலும் முழுநேரம் விவசாயியாகவே இருக்கிறேன். விவசாயம் செய்வதை நான் மிகவும் நேசிக்கிறேன். சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தாலும் எனது நிலத்துக்கு சென்று விவசாய பணிகளை கவனிப்பதற்கு தனி நேரம் ஒதுக்கிவிடுவேன். சினிமாவை பொறுத்தவரை எனக்கு பெரிய கனவுகள் கிடையாது.

 இப்போது என்னென்ன படங்கள், என்னென்ன வேடங்கள் கிடைக்கிறதோ அதுவே திருப்திதான். இதேபோல் எனது சினிமா வாழ்க்கை தொடர்ந்தால் போதும். கடந்த 10 வருடத்தில் நிறைய படங்களில் நடித்துவிட்டேன். என்னுடைய பண்ணையில் நான் நிறைய அறுவடை செய்திருக்கிறேன். 

எனது சக நடிகர்களுக்கு நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன். எப்போதுமே எளிதான வேடமாக இருந்தால்தான் நான் ஏற்கிறேன். தேர்வு செய்தே படங்களை ஒப்புக்கொள்கிறேன்.இவ்வாறு கிஷோர் கூறினார்.

No comments :

Post a Comment