கோயிலில் வெள்ளிகிரீடம் திருடிய பாடலாசிரியருக்கு 6 மாதம் சிறை
ஆஞ்சநேயர் கோயிலில் வெள்ளி கிரீடம் திருடிய சினிமா பாடலாசிரியருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
டோலிவுட்டில் 100 படங்களுக்கு மேல் பாடல் எழுதி இருப்பவர் குலசேகர். ஆனாலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லாமல் இருந்தது.
இதனால் அவர் சோகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. காகிநாடாவில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் ஒன்றில் வெள்ளி கிரீடம் காணாமல் போனது. இது பற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியதில் குலசேகர் அந்த கோயிலுக்கு வந்தபோது வெள்ளி கிரீடத்தை திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து வழக்கு பதிந்து காகிநாடா 5வது கூடுதல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், குலசேகருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
இது டோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து குலசேகர் தரப்பில் கூறும்போது, குலசேகர் மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார். இதனாலேயே இதுபோன்ற ஒரு செயலில் ஈடுபட்டுவிட்டார் என்றனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment