விஜய்சேதுபதி படத்துக்கு தியேட்டர் கிடைக்கவில்லை

No comments
விஜய் சேதுபதி படத்துக்கு தியேட்டர் கிடைக்காததால் ரிலீஸ் தள்ளிப்போகிறது.‘பீட்சா ஹீரோ விஜய் சேதுபதி நடித்த படங்கள் வரிசையாக ஹிட் ஆனது. இதையடுத்து அவர் நடிக்கும் படம் ‘ரம்மி. இப்படத்தை வரும் 27ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

 ஆனால் தமிழ், இந்தி மற்றும் ஹாலிவுட் படங்கள் என பல படங்கள் நாளை ரிலீசாகிறது. அதேபோல் பொங்கல் படங்களும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளதால் எதிர்பார்த்த அளவுக்கு கூடுதலான எண்ணிக்கையில் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து படத்தை ரிலீஸ் செய்வதை தள்ளி வைக்க ‘ரம்மி‘ பட குழுவினர் எண்ணி உள்ளனர். அதேபோல் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரித்திருக்கும் ‘மதயானை கூட்டம்‘, சேரன் இயக்கியுள்ள‘ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை’ ஆகிய படங்களுக்கும் தியேட்டர் குறைந்த அளவே கிடைக்கும் நிலை இருந்தாலும் கிறிஸ்துமஸ் தினத்தில் படத்தை வெளியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

No comments :

Post a Comment