மகளின் பிறந்தநாளை கொண்டாட ஆஸ்திரேலியா பறந்த அஜித்

No comments
ஆடம்பர கப்பலில் குழந்தையின் பிறந்த தினத்தை கொண்டாட குடும்பத்துடன் ஆஸ்திரேலியா சென்றார் அஜீத். ஆரம்பம் படத்தையடுத்து அஜீத் நடிக்கும் படம் வீரம். சிறுத்தை சிவா டைரக்டு செய்கிறார். 

இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த கையோடு திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு சென்ற அஜீத் படம் வெற்றி அடைய வேண்டி மொட்டை போட்டுக்கொண்டார். பொங்கலையொட்டி படம் திரைக்கு வரவுள்ளது. சமீபத்தில் வீரம் படத்தை பார்த்த அஜீத் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை அழைத்து பாராட்டியதுடன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

 வீட்டில் கிறிஸ்துமஸ் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். இதையடுத்து குடும்பத்தினருடன் ஆஸ்திரேலியா பறந்தார். மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மைத்துனர் நடிகர் ரிச்சர்ட் ஆகியோர் அஜீத் உடன் சென்றனர்.

 சிட்னியில் இருந்து வெலிங்டன் செல்லும் ஆடம்பர கப்பலான குருஸ்ல் அஜீத் தங்குகிறார். அங்கு அனோஷ்காவின் பிறந்த தினத்தை கொண்டாடுவதுடன், புத்தாண்டையும் கொண்டாட உள்ளார்.

 வீரம் படம் திரைக்கு வருவதற்குமுன் வரும் 9ம் தேதி அவர் சென்னை திரும்புகிறார்.

No comments :

Post a Comment