கேரவனில் சிக்கிய ஸ்ரீகாந்த் கதவை உடைத்து மீட்டனர்

No comments
கேரவன் கதவு தானாகப் பூட்டிக்கொண்டதால் அதில் சிக்கிக்கொண்ட ஸ்ரீகாந்தை கதவை உடைத்து மீட்டனர்.நடிகர் ஸ்ரீகாந்த் இப்போது, ஓம் சாந்தி ஓம் என்ற படத்தில் நடித்து வருகிறார். சூர்ய பிரபாகர் இயக்கும் இதில், ஸ்ரீகாந்த் ஜோடியாக நீலம் நடிக்கிறார்.

 இதன் படப்பிடிப்பு, சென்னை பின்னி மில்லில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் நேற்று முன்தினம் கலந்துகொண்ட ஸ்ரீகாந்த், மதியம் சாப்பிடுவதற்காக கேரவனுக்குள் சென்றார். சாப்பிட்டு முடிந்து அவர் வெளியே வர முயன்றபோது கதவு திறக்கவில்லை. 

 நீண்ட நேரமாகப் போராடியும் கதவு திறக்காததால், வெளியே இருந்த உதவியாளர்களுக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் வெளியில் இருந்து கதவை திறந்து பார்த்தனர். முடியாததால் வேனுக்குள் சிக்கிக்கொண்ட ஸ்ரீகாந்த் தவித்தார். படக்குழுவினர் அனைவரும் அங்கு கூடி கேரவனின் கதவை உடைத்து ஸ்ரீகாந்தை மீட்க முடிவு செய்தனர். 

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிறகு கதவை உடைத்து ஸ்ரீகாந்தை மீட்டனர். சுமார் ஒரு மணி நேரம் கேரவனில் சிக்கிக்கொண்ட ஸ்ரீகாந்தை, பிறகு ஓய்வெடுக்க வைத்தனர். ஹீரோ ஒருவர் கேரவனில் மாட்டிக்கொண்ட சம்பவம் படப்பிடிப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments :

Post a Comment