திருப்பதியில் அஜீத் மொட்டை

No comments
திருப்பதி கோவிலில் அஜீத் மொட்டை போட்டுக்கொண்டார்.தான் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் திருப்பதி சென்று சாமி கும்பிடுவது அஜீத்தின் வழக்கம். 

தற்போது அவர் நடிக்கும் வீரம் படத்தின் வேலைகள் முடிவடைந்தது. இதையடுத்து வீரம் இயக்குனர் சிவாவுடன் நேற்று முன்தினம் இரவு திருப்பதி சென்றார் அஜீத். அங்கு இருவரும் மொட்டை போட்டு சாமி கும்பிட்டனர்.

 வீரம் படத்தை அடுத்து கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் அஜீத். அடுத்த வருடம் பிப்ரவரியில் ஷூட்டிங் தொடங்குகிறது. அதிலும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிலேயே நடிக்கிறார்.

No comments :

Post a Comment