சூர்யா படத்திற்கு நோ சொன்ன சனா கான்

No comments
சூர்யா படத்தில் குத்து பாடலுக்கு நடனம் ஆட மறுத்துவிட்டாராம் சனா கான். சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு, ஆயிரம் விளக்கு, ஒரு நடிகையின் டைரி போன்ற படங்களில் நடித்திருப்பவர் சனா கான். 

 இதனைத் தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து பாலிவுட் பக்கம் வாய்ப்பு தேடி சென்றார். சல்மான் கான் நடத்தும், பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற சனாவுக்கு பின்னர் சல்மான் தான் நடித்த ஜெய் ஹோ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

 இதற்கிடையில் தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் குத்து பாடல் ஒன்றில் நடனம் ஆடுவதற்காக சனாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. இந்தி படத்தில் நடிப்பதை காரணம் காட்டி சூர்யா படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். இதுகுறித்து அவர் கூறுகையில், சூர்யா படத்தில் நடிக்க ஆசை தான். ஆனால் சல்மானுடன் நடித்துள்ள ஜெய் ஹோ படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. 

 இது எனக்கு பெரிய படம். இப்பட குழுவினருடன் நான் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக வெவ்வேறு ஊர்களுக்கு சென்று கொண்டிருப்பதால் அடுத்த 2 மாதங்களுக்கு என்னால் கால்ஷீட் தர முடியாது. மேலும் குத்து பாடலுக்காக நான் கால்ஷீட் ஒதுக்குவது முடியாத காரியம் என்றும் ஆனால் தமிழில் நிச்சயம் நடிப்பேன் எனவும் கூறியுள்ளார்.

No comments :

Post a Comment