பெங்களூரில் நண்பரின் வீட்டில் எளிமையாக‌ பிறந்தநாளை கொண்டாடப் போகும் ரஜினி!

No comments
வழக்கமாக ரஜினி தனது பிறந்த நாளை தன் குடும்பத்தினருடன் எளிமையாக கொண்டாடுவார். அல்லது பிறந்த நாள் நேரத்தில் இமயமலை ஆன்மீக பயணத்தில் இருப்பார். கடந்த ஆண்டு சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் ரசிகர்கள் நடத்திய பிறந்த நாள் விழாவில் திடீரென கலந்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். 


 இந்த ஆண்டு ரஜினி தன் பிறந்த நாளை பெங்களூரில் உள்ள தனது பால்யகால நண்பர்களுடன் கொண்டாடுவது என்று ஏற்கெனவே முடிவு செய்திருந்தார். நண்பர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற இந்த முடிவு. அதன்படி நேற்று (டிசம்பர் 10) மாலை விமானம் மூலம் பெங்களூர் சென்றார். இன்று(டிசம்பர் 11) அவர் தனது ஆசிரியர். 

நண்பர்களை சந்திக்கிறார். பெங்களூரில் தான் வாழ்ந்த இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்க்கிறார். நாளை (டிசம்பர் 12) தனது பிறந்த நாளை ஒரு நண்பர் வீட்டில் எளிமையாக கொண்டாடுகிறார். இவை எல்லாமே ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. 

No comments :

Post a Comment