ஹீரோயின்கள் மீது வில்லன் நடிகர் தாக்கு
துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்தவர் வித்யுத் ஜம்வால். தற்போது இந்தி படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவர் கூறியதாவது: என்னுடைய சண்டை காட்சிகளை ரசிகர்கள் பாராட்டுவது சந்தோஷமாக இருக்கிறது. நான் எப்போதும் டூப் நடிகரை பயன்படுத்தியதில்லை.
என்னை ஆக்ஷன் ஹீரோ என ரசிகர்கள் அழைப்பது பிடித்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக ‘கமாண்டோ‘ படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் என்னை உயரத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. ஹீரோயின்களை காப்பாற்றுவது போலவும், ஆக்ஷன் ஹீரோக்கள் பஞ்ச் வசனம் பேசுவது போலவும் ஆன காட்சிகளில் நடிக்க எனக்கும் ஆசை இருக்கிறது.
பாலிவுட்டில் ஆக்ஷன் ஹீரோயின்கள் இல்லை என்ற குறை இருப்பதாக சொல்கிறார்கள். அப்படித்தான் இருக்க வேண்டும். ஹீரோயின்கள் ஆக்ஷன் காட்சிகளிலும், வில்லியாகவும் நடிக்க ஆரம்பித்துவிட்டால் என்னைப் போன்ற நடிகர்கள் எங்கே போவது? இந்திய நடிகைகள் நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர்கள். அவர்களை ஆக்ஷன் அவதாரத்தில் பார்க்க முடியாது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment