வீரம் எனக்கு நல்லதொரு மறு தொடக்கமாக அமையும்:தமன்னா நம்பிக்கை!

No comments
வீரம் படத்தில், அஜீத்துடன் புதிய உற்சாகத்துடன் நடித்து முடித்துள்ளார் தமன்னா. இந்த பட அனுபவம் குறித்து, அவர் கூறுகையில், இதில், கிராமத்து தேவதையாக வலம் வரும், என் கேரக்டர் பெருவாரியான ரசிகர்களை, கவரும் வகையில் உள்ளது. 

இதுவரை எந்த படத்திலும் இல்லாத வகையில், சென்டிமென்ட் காட்சிகளும், எனக்கு தரப்பட்டு உள்ளதால், இந்த படம், எனக்கு நல்லதொரு மறு தொடக்கமாக அமையும் என்கிறார். இந்நிலையில், தமிழில் அடுத்து புதிய படம் இல்லாததால், ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வரும் தமன்னாவை சந்திக்கும் மீடியாக்கள், ஸ்ருதிக்கும் உங்களுக்கும் தகராறாமே என, கேட்பதால், கடும் டென்ஷனில் இருக்கிறார்.

 ஸ்ருதி ஹாசனுக்கும், எனக்குமிடையே எந்த பிரச்னையும் இல்லை. யார் வாய்ப்பையும், யாரும் தட்டிப்பறிக்கவில்லை. அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதனால், எங்களுக்குள் சிண்டு முடிந்துவிடும் வேலையை விட்டு விடுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளாராம்.

No comments :

Post a Comment