தமிழில் அதிக சம்பளம் மலையாளத்தை ஒதுக்கிய நடிகை

No comments
தமிழ் படத்தில் அதிக சம்பளம் கிடைப்பதால் மலையாள படத்தை ஏற்க மறுத்துவிட்டார் கீர்த்தி. நெற்றிக்கண் படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தவர் மேனகா. மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்திருப்பதுடன் சொந்தமாக படங்கள் தயாரித்திருக்கிறார்.

 இவரது மகள் கீர்த்தி. மலையாளத்தில் கீதாஞ்சலி என்ற படம் மூலம் மோகன்லால் ஜோடியாக அறிமுகமானார். இவருக்கு மலையாளத்தில் பஹத் பாசிலுடன் புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதை ஏற்க மறுத்துவிட்டார். இதுபற்றி கீர்த்தி கூறும்போது,பஹத் படத்தில் நடிக்க ஆவலாக இருந்தாலும் அதை என்னால் இப்போது ஏற்க முடியாது. 

கல்லூரி இறுதிகட்ட செமஸ்டர் தேர்வு எழுத வேண்டி இருப்பதால் இந்த முடிவு எடுத்திருக்கிறேன் என்றார். ஆனால் அவருக்கு தமிழிலும் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறதாம். அதிக சம்பளம் என்பதால் மலையாள படத்தை தவிர்த்துவிட்டு தமிழில் நடிக்க ஆர்வம் காட்டுகிறாராம் கீர்த்தி. 


No comments :

Post a Comment