அரச குடும்பத்துக்குச் சொந்தமான படகில் சவாரி செய்த உற்சாகத்தில் ஸ்ருதி!
சில ஆண்டுகளுக்கு முன், இந்தியில் வெளியான, வெல்கம் படத்தின் தொடர்ச்சியாக, இப்போது, வெல்கம் பேக் என்ற படம் தயாராகி வருகிறது. இப்படத்தில், ஜான் ஆபிரகாமுக்கு ஜோடியாக, நம்ம ஊர் ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு, துபாயில் நடந்தபோது, அந்த நாட்டின், அரச குடும்பத்துக்குச் சொந்தமான, ஒரு படகில், சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தினராம். ஆடம்பரமான, இந்த படகில், திறந்த வெளி நீச்சல்குளம் மற்றும் ஹெலிகாப்டர் இறங்குவதற்கான வசதிகளும் உள்ளதாம்.
அதனால், முக்கியத்துவம் வாய்ந்த பாடலுடன், சில காட்சிகளும், இங்கு தான் படமானதாம். ஜாலியாக படகு சவாரி செய்வது, நீச்சல் குளத்தில் ஹாயாக நீந்திக் குளிப்பது போன்றவற்றில், அதிக ஈடுபாடு கொண்ட ஸ்ருதி ஹாசன், அந்த படகில் படப்பிடிப்பு நடந்த, இரண்டு வாரமும், மிகுந்த உற்சாக மனநிலையுடன் நடித்தாராம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment