ரஜினிக்காக காத்திருக்கும் சந்திரமுகி- 2

No comments
ரஜினி நடித்தால் தான் சந்திரமுகி பார்ட்- 2 எடுப்பேன் என்று கூறியுள்ளார் இயக்குனர் பி.வாசு.
ரஜினி நடித்த உழைப்பாளி, மன்னன், சந்திரமுகி, குசேலன் போன்ற படங்களை இயக்கியவர் பி.வாசு.

இந்நிலையில் அவர் கூறுகையில், சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருந்தாலும் கொஞ்சமும் பந்தாவோ, தலை கனமோ இல்லாமல் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டிருப்பதுடன் அனைவரிடமும் எளிமையாக பழக கூடியவர் ரஜினி.

யாராக இருந்தாலும் ஒரேயொரு நாள் அவரோடு இருந்தால் போதும், அவரது நல்ல குணங்களும் உடனிருப்பவருக்கு வந்துவிடும்.

இன்றைக்குள்ள நடிகர்கள் அவரது பாணியை பின்பற்றலாமா? என்கிறார்கள். அவரது பாணியை பின்பற்றினால் அது பொருத்தமாக இருக்காது.

அவரது குணத்தை பின்பற்றலாம், அதை பின்பற்றினாலே திரையுலகில் ஒரு நல்ல இடத்தை பெற முடியும்.

சந்திரமுகி பார்ட்- 2 ரஜினியை வைத்து இயக்குவீர்களா? என்கிறார்கள்.

ரஜினி நடித்தால் மட்டும்தான் சந்திரமுகி 2ம் பாகம் இயக்குவேன். இல்லாவிட்டால் அப்படத்தை தமிழில் இயக்க மாட்டேன்.

கன்னடத்தில் இயக்கிய சந்திரமுகி பார்ட்- 2 சூப்பர் ஹிட்டானது என்று தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment