அஜீத் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம மனிதர்கள் : திருவான்மியூரில் பரபரப்பு
அஜீத் வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த 2 மர்ம நபர்கள் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். அஜீத் வீடு சென்னை திருவான்மியூரில் சீ வார்டு சாலையில் உள்ளது. வீட்டு காம்பவுண்ட் சுவர் 10 அடிக்கும் உயரமாக கட்டப்பட்டிருப்பதுடன், அதே உயரத்துக்கு இரும்பு கேட்டும் அமைக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் நள்ளிரவு 2 மர்ம நபர்கள் இரும்பு கதவை தட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
‘யார் வேண்டும் ஏன் கதவை தட்டுகிறீர்கள்? என்று அவர்களிடம் வீட்டு காவலாளி விசாரித்தார். ‘நாங்கள் தல ரசிகர்கள் அவரை பார்க்கணும் என்றனர். அவர் வெளியில் சென்றிருக்கிறார். பகலில் வந்து பாருங்கள்‘ என்று பதில் அளித்து அவர்களை போகச் சொன்னார் காவலாளி. அந்த நேரத்தில் வெளியில் சென்றிருந்த அஜீத், காரில் வீடு திரும்பினார். அவருக்காக கதவை திறந்தார் காவலாளி. கார் வீட்டுக்குள் நுழைந்ததும் பின்னாலேயே நபர்கள் ஓடி வந்தனர்.
அதற்குள் அஜீத் காரிலிருந்து இறங்கி வீட்டுக்குள் சென்றுவிட்டார்.
அவர்கள் இருவரையும் வீட்டிலிருந்த பாதுகாவலர்கள் பிடித்து வைத்துக்கொண்டு திருவான்மியூர் போலீசுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வீட்டுக்கு விரைந்து வந்ததும் இருவரையும் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது ஒருவர் கண்ணன், மற்றொருவர் வெற்றி என்று தெரியவந்தது.
அஜீத்தை சந்திக்க வந்தவர்கள்தான் என்று விசாரணையில் தெரிந்தது. அவர்கள் மீது புகார் எதுவும் அஜீத் தரப்பில் தரப்படாததால் போலீசார் இருவரையும் எச்சரித்து விடுவித்தனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment