மீண்டும் இணைகிறது ஹாட்ரிக் ஜோடி
மீண்டும் ராம்சரணுடன் ஜோடி சேர்வதில் ஹாட்ரிக் சாதனை செய்யவிருக்கிறார் காஜல் அகர்வால்.
ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘மகதீரா’ படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர்.
படம் சூப்பர் டூப்பர்ஹிட் ஆகி இருவரும் ராசியான ஜோடி என பெயர் எடுத்தது சுவையான வரலாறு.
இந்த ராசிதான் மீண்டும் இருவரையும் ‘நாயக்’ என்ற படத்தில் மீண்டும் ஜோடியாக நடிக்கவைத்தது.
இப்போது மீண்டும் மூன்றாவது முறையாக இந்த ஜோடி ஒரு படத்தில் இணைகிறது.
இந்தப்படத்தை பிரபல இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்குகிறார். முதலில் ராம்சரணுக்கு ஜோடியாக புதுமுகம் ஒருவரை நடிக்க வைக்கலாம் என்றுதான் நினைத்தார்களாம்.
ஆனால் சரியான ஜோடி கிடைக்காததால் காஜலையே ஒப்பந்தம் செய்துவிட்டார்கள். வரும் ஜனவரி 18ம் திகதி முதல் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்க இருக்கிறது
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment