சிம்புக்கு போட்டியாக விஜய்யுடன் தனுஷ் திடீர் டீம்அப்
சிம்புக்கு போட்டியாக விஜய்யுடன் திடீரென டீம் சேர்ந்திருக்கிறார் தனுஷ். பொங்கல் வெளியீடாக ஜில்லா படம் நாளை ரிலீசாகிறது. இதை முன்னிட்டு சமீபத்தில் விஜய்யை சந்தித்த தனுஷ், அவருக்கு படம் வெற்றி பெற வாழ்த்து சொன்னார். அத்துடன் ஜில்லா பாடலுக்கு அவருடன் சேர்ந்து நடனம் ஆடினார்.
இதை தனது டுவிட்டர் பக்கத்திலும் தானே வெளியிட்டு விஜய்யை பாராட்டி இருந்தார் தனுஷ். திடீரென விஜய் ரசிகராக தனுஷ் மாறியிருப்பது சிம்புக்கு போட்டியாக இருக்கலாம் என கோடம்பாக்கத்தில் கிசு கிசுக்கப்படுகிறது.
அஜீத்தின் தீவிர ரசிகர், சிம்பு. தனது படங்களில் ஒரு காட்சியாவது அஜீத் புகழ் பாடும்படி வைத்துவிடுவார். மன்மதன் படத்தில் அஜீத் ரசிகராகவே அவர் நடித்திருந்தார். சிலம்பாட்டம் படத்தில் பில்லா அஜீத் கெட்அப்பில் ஒரு காட்சியில் வருவார். அஜீத் படம் ரிலீசாகும்போது முதல் நாள் முதல் ஷோவை தியேட்டரில் சென்று அவர் பார்ப்பார்.
அதை அவரே பப்ளிசிட்டியும் செய்வார். இந்நிலையில்தான் விஜய் ரசிகனாக தன்னை அடையாளம் காட்ட ஆரம்பித்திருக்கிறார் தனுஷ். இது சிம்புக்கு போட்டியாகவும் தன்னைத்தானே புரமோட் செய்துகொள்ளவும் தனுஷ் பயன்படுத்தும் டெக்னிக் என கோலிவுட்டார் கருதுகிறார்கள்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment