பிரபலங்களின் பெயர்களில் உருவாகும் படங்கள்

No comments
தமிழ் சினிமா பிரபலங்களின் பெயர்களை டைட்டிலாக வைத்து உருவாகும் படங்கள் அதிகரித்து வருகின்றன. அவற்றில் சில டைட்டில்கள் பிரச்னைகளையும் சந்தித்திருக்கின்றன. 

ஏற்கனவே, பெருமான் தி ரஜினிகாந்த் என்ற டைட்டிலில் ஒரு படம் வந்தது. இப்போது சிநேகாவின் காதலர்கள், இளையராஜா சவுண்ட் சர்வீஸ், எம்.ஜி.ஆர் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மதகஜராஜா, தனுஷ் 5ம் வகுப்பு, சரவணன் என்கிற சூர்யா, நம்பியார், பண்ணையாரும் பத்மினியும், நான்தான் பாலா, பாலக்காட்டு மாதவன் போன்ற பெயர்களில் படங்கள் உருவாகி வருகின்றன.

 இதில் சரவணன் என்கிற சூர்யா பட டைட்டிலை மாற்ற வேண்டும் என்ற பஞ்சாயத்து நடந்து வருகிறது. சூர்யாவின் நிஜப் பெயர் சரவணன் என்பதால், அந்த டைட்டிலை மாற்ற வேண்டும் என்று, அவரது தரப்பில் கேட்டுள்ளார்களாம்.

No comments :

Post a Comment