அரசியலுக்கு வருகிறார் நமீதா

No comments
எனது அரசியல் பிரவேசம் விரைவில் இருக்கும் என்று நமீதா கூறினார்.திருச்சிக்கு நேற்று வந்த நமீதா, நிருபர்களிடம் கூறியதாவது:மக்களவை தேர்தலுக்கு முன்னர் அரசியலில் குதிப்பேன். நான் சேரப்போவது தேசிய கட்சியா, மாநில கட்சியா என்பதை அப்போது அறிவிப்பேன். 

விஜயகாந்த் அரசியலிலும், சினிமாவிலும் ஸ்ட்ராங்கானவர். அவரிடம் கூட்டணி வைக்க எல்லா கட்சிகளும் முயற்சி செய்து வருகின்றன. முதல்வர் ஜெயலலிதா பெண்களுக்கு பல நல்ல திட்டங்களை செய்து வருகிறார். அதை வரவேற்கலாம்.

 மோடி சிறப்பான முறையில் பிரசாரம் செய்து மக்களை கவர்ந்து வருகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.அவரிடம், சரத்குமாருடன் நடித்துள்ளீர்களே, அவரது கட்சியில் சேர்வீர்களா? என்று நிருபர்கள் கேட்டனர். முதலில், ஆமாம் என்றவர், பின்னர் அவர் கட்சி நடத்துகிறாரா? என்று கேட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

No comments :

Post a Comment