தந்தையை வைத்து படம் தயாரிக்கும் மகள்
பட்டத்து யானை படத்தில் நடித்த அர்ஜுன் மகள் தயாரிப்பாளர் ஆனார். விஷால் ஜோடியாக பட்டத்து யானை படத்தில் நடித்தவர் ஐஸ்வர்யா. இவர் நடிகர் அர்ஜுனின் மகள். மற்றொரு மகள் அஞ்சனா.
இவர்கள் இருவரும் சேர்ந்து தந்தை அர்ஜுன் நடிக்கும் ஜெய்ஹிந்த் 2ம் பாகம் தயாரிக்கின்றனர். ஹீரோவாக நடிப்பதுடன் படத்தை இயக்குகிறார் அர்ஜுன். சுர்வீன் சாவ்லா ஹீரோயின்.
புதுமுகமாக மும்பை நடிகை சிம்ரன் கபூர் அறிமுகமாகிறார். தமிழ், கன்னடம் தெலுங்கு என 3 மொழிகளில் இப்படம் உருவாகிறது. இதன் ஷூட்டிங் 80 சதவீதம் முடிந்திருக்கிறது.
இந்தியாவில் கல்வியின் நிலை எப்படி உள்ளது. அதற்கு மாற்றம் தேவையா என்ற கருவை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment