சீனாவில் வைகைப்புயல்

No comments
படப்பிடிப்பிற்காக சீனா பறக்கிறார் வைகைப்புயல் வடிவேலு.
தற்போது வடிவேலு நடித்து வரும் ‘ஜெகஜால புஜபல தெனாலிராமன்’ படத்தின் பெரும் பகுதி முடிந்து விட்டது.

மீதமுள்ள காட்சிகளை படமாக்க இம்மாத இறுதியில் சீனா செல்ல இருக்கின்றனர் படக்குழுவினர்.

இந்தப் படத்தின் ஒரு பாடல் காட்சியையும், க்ளைமாக்ஸ் காட்சியையும் சீனாவில் படமெடுக்க இயக்குனர் முடிவு செய்துள்ளார்.

இயக்குனர் யுவராஜ். டி.இமானின் இசையில் படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளது. இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக மீனாட்சி சேஷாத்திரி என்ற புதுமுகத்தை அறிமுகம் செய்துள்ளனர்.

தம்பி இராமையா இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் . ஏ.ஜி.எஸ் என்டெர்டெயின்மெட் தயாரிக்கும் தெனாலிராமன் படம் வரும் மார்ச் மாதம் திரையைத் தொட இருக்கிறது.

No comments :

Post a Comment