நடிகை தற்கொலை செய்த வீட்டில் ஷூட்டிங் நடத்திய ஹீரோயின்

No comments
நடிகை தற்கொலை செய்துகொண்ட வீட்டில் ஷூட்டிங் நடத்தினார் பூஜா காந்தி. கொக்கி, திருவண்ணாமலை போன்ற படங்களில் நடித்திருப்பவர் பூஜா காந்தி. இவர் கன்னடத்தில் அபிநேத்ரி என்ற படத்தில் நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு, கன்னட நடிகை கல்பனா காதல் தோல்வியால் மனஅழுத்தம் ஏற்பட்டு, அதிகமான தூக்க மாத்திரைகளையும், வைர துகள்களையும் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

அவரது வாழ்க்கை கதையில்தான் தற்போது பூஜா காந்தி நடித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இதை பூஜா மறுத்துவருகிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் இப்படத்தின் ஷூட்டிங் கர்நாடகாவில் பெல்காமில் உள்ள ஒரு வீட்டில் நடந்தது. இந்த வீட்டில்தான் கல்பனா தற்கொலை செய்துகொண்டார். 

படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அங்கு படமாக்கப்பட்டதாக பட குழு வினர் கூறினர். கல்பனா தற்கொலை செய்துகொண்டது போன்ற தற்கொலை காட்சியில் பூஜாகாந்தி நடித்ததாக தெரிகிறது. இதுபற்றி பூஜாவிடம் கேட்டபோது, பெல்காமில் கல்பனா வீட்டில் இப்படத்தின் ஷூட்டிங் நடந்தது உண்மைதான். ஷூட்டிங் நடத்த இந்த வீட்டை தேர்வு செய்ததாலேயே இது கல்பனாவின் வாழ்க்கை வரலாறு படம் என்று அர்த்தமல்ல என்றார்.

No comments :

Post a Comment