சமந்தாவுக்கு ரகசிய சிகிச்சை
நடிகை சமந்தாவுக்கு ஸ்கின் அலர்ஜி ஏற்பட்டு, ரகசியமாக சிகிச்சை பெற்று வருகிறார். நடிகை சமந்தாவுக்கு ஸ்கின் அலர்ஜி ஏற்பட்டிருக்கிறது. இதனால், அவர் படப்பிடிப்பில் பங்கேற்கும்போது அதிக உஷ்ணம் உமிழும் விளக்குகள் முன் நடிக்கும் போது, அவருக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது அலர்ஜியால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, ஷூட்டிங்கிற்கு வருவதை சில நாள் தள்ளிப்போட்டுவிட்டு டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்றார். இதில் குணம் அடைந்து மீண்டும் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். ஆனாலும், அவ்வப்போது அலர்ஜி ஏற்பட்டு முகத்தில் பருக்கள் தோன்றி அவதிப்படுவதாக கூறப்படுகிறது.
அஞ்சான் படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் முடிந்ததையடுத்து மீண்டும் சிகிச்சை பெற டாக்டரை அணுகி உள்ளார். ஏற்கனவே சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனையிலிருந்து வேறு மருத்துவமனைக்கு மாறி சிகிச்சை பெறுகிறாராம்.
மருத்துவமனைக்கு ஒரு நடிகை சென்றாலே, ஏதாவது கதை கட்டி விடுவார்கள் என்று பயந்து ரகசியமாக சிசிக்சை பெற்று வருகிறார் சமந்தா.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment