சூர்யா படத்துக்கு தலைப்பு தேடும் இயக்குனர்

No comments
ஹரி இயக்கத்தில் சிங்கம் 2 படத்தில் நடித்த சூர்யா அடுத்து லிங்குசாமி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இதன் ஷூட்டிங் மும்பையில் நடக்கிறது. இப்படத்துக்கு பெயரிடப்படாமல் ஷூட்டிங் தொடங்கப்பட்டது. 

இந்நிலையில் படத்துக்கு ராஜு பாய், மன்னர், ரவுடி என 3 தலைப்பில் ஒன்றை தேர்வு செய்ய உள்ளதாக இணைய தளங்களில் தகவல் வெளிவந்தது. இதுகுறித்து பட தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் கூறும்போது, லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

 3 பெயர்களை வெளியிட்டு இதில் ஏதாவது ஒரு பெயர் வைக்கப்படும் என்று இணைய தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அப்படி எந்த முடிவும் எடுக்கவில்லை.

 இப்படத்துக்கு அனைவரையும் கவரும் வகையில் அழுத்தமான ஒரு தலைப்பு வைக்க இயக்குனர் முடிவு செய்துள்ளார். அந்த தலைப்பை இன்னும் தேடி வருகின்றனர் என்றார்.

No comments :

Post a Comment