8 வருடங்களுக்கு பிறகு நேருக்கு நேர் மோதும் விஜய்- அஜீத் படங்கள்

No comments
எட்டு வருடத்துக்கு பிறகு விஜய்-அஜீத் நடிக்கும் படங்கள் நேருக்கு நேர் மோதுவதால் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஜய்- அஜீத் நடித்த படங்கள் 8 வருடத்துக்கு பிறகு ஒரேநாளில் ரிலீஸ் ஆவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி விஜய் நடித்த போக்கிரி படம் திரைக்கு வந்தது.

 அதேநாளில் அஜீத் நடித்த ஆழ்வார் படம் திரைக்கு வந்தது. இதனால் இரு நடிகர்களின் ரசிகர்களிடையேயும் தோரணம் கட்டுவதுமுதல் டிக்கெட் வாங்குவதுவரை போட்டி ஏற்பட்டது. இதற்கிடையில் இருபெரும் நடிகர்கள் நடித்த படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் செய்தால் ஏதாவது ஒரு படம் பாதிப்புக்குள்ளாகிறது என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கூடிப்பேசினர். இதையடுத்து சில வாரங்கள் இடைவெளிக்கு பிறகு படங்களை ரிலீஸ் செய்ய ஆலோசனை வழங்கினர். 

இதனால் பெரிய படங்கள் ஒரேநாளில் ரிலீஸ் ஆகாமல் வெவ்வேறு நாட்களில் இதுவரை ரிலீஸ் ஆகிவந்தது.ஆனால் வரும் பொங்கல் தினத்தையொட்டி நேசன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜில்லா, சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள வீரம் ஆகிய படங்கள் 10ம் தேதியன்று ஒரேநாளில் ரிலீஸ் ஆகிறது. 

 இதனால் இருதரப்பு ரசிகர்களும் படம் வெளியாகும் தியேட்டரில் தோரணம் அமைப்பது, பேனர் கட்டுவது, கட்அவுட் வைப்பது என்று பரபரப்பாக உள்ளனர். படம் வெற்றி பெறுவதற்காக இரு தரப்பு ரசிகர்களும் கோயில்களில் சிறப்பு பூஜையும் செய்து வருகின்றனர்.

No comments :

Post a Comment