திருமணத்திற்கு பின்னர் நடிப்பு? நஸ்ரியா

No comments
திருமணத்திற்கு பிறகு நடிப்பது குறித்து முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார் நஸ்ரியா. நடிகை நஸ்ரியாவுக்கும், இயக்குனர் பாசில் மகன் பஹத் பாசிலுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. 

 இவர்களது திருமணம் வருகிற ஆகஸ்டு மாதம் 2வது வாரத்தில் கேரளாவில் நடக்கிறது. இந்நிலையில் திருமணத்திற்கு பின்னர் நடிப்பது குறித்து நஸ்ரியா கூறுகையில், பஹத் எனக்கு நிறைய சுதந்திரம் கொடுத்துள்ளார். 

திருமணத்திற்க்கு பிறகு நான் படங்களில் நடிப்பேனா என்று எனக்கு தெரியவில்லை. தற்போது நான் ஒப்புக்கொண்ட அனைத்து படங்களில் நடித்து கொண்டு வருகிறேன்.அதை முடித்துவிட்டு பிறகு யோசிப்பேன் என்று கூறியுள்ளார்.

No comments :

Post a Comment